Saturday, September 8, 2007

அதிசயம்


ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ
கா.சரன்

நினைவில்லாமல் வாழ்வாயா?

நீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு நேரம்…
நீ மருத்துப் பேசிய ஒரு தருணம்
நான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…
நீ வெருத்து துரத்திய இத்தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு பிணம்…

மறக்கச் சொல்கிராய் உன்னை
மடியச் சொல்
மறந்து விடுகிறேன்
மறக்கச் சொல்லி
மனமில்லா பிணமாக்காதே

சூடினாள் உன் கையாள்
மனமேடையில் மலர்மாலை சூடுகிறேன்
வாடினாள் உன் கையாள்
பிணமேடையில் மலர்வளையம் சுமக்கிறேன்

சத்தமில்லா
நித்தம் நிம்மதியான
உறக்கம் கொள்கிறேன்
நீயென்னை
நித்தமும் சிந்திக்காமல்
நிமிடமேனும் நிம்மதி அடைவாயா……?


கா.சரன்