Friday, April 20, 2012

புரியாத‌ ம‌ர‌ண‌மும் பாச‌மும்

ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையிலிருந்த‌
தாத்தாவிற்கு

நிறைவேறாத‌ ஆசையிருப்பதாக‌

வாழ்ந்த‌ ம‌ண்ணையும்
அணிந்த‌ பொண்ணையும்
இழைத்து ஊட்டினார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்

பெண்ணாசையாக‌ இருக்க‌லாமென்று
வாழ்விழ‌ந்த‌ பெண்ணொருத்தியை
முத்த‌மிட‌ச் சொன்னார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்
ச‌ட‌ங்குக‌ள் தொட‌ர‌...

க‌டைசியாக‌
நான் பாலுட்ட‌
பிரிந்து போன‌து ஆவி

அருகிலிருந்த‌ கிழவி
ஒருத்தி சொன்னாள்
அம்புட்டு பாச‌ம் பேர‌ன் மீது

குற்ற‌ உண‌ர்வில்
நான் நிற்க ............

க‌டைசி வ‌ரை புரிய‌வில்லை
தாத்தாவின் ம‌ர‌ண‌மும் பாச‌மும்