மரணப் படுக்கையிலிருந்த
தாத்தாவிற்கு
நிறைவேறாத ஆசையிருப்பதாக
வாழ்ந்த மண்ணையும்
அணிந்த பொண்ணையும்
இழைத்து ஊட்டினார்கள்
அப்பொழுதும் பிரியாத
ஆவியினால்
பெண்ணாசையாக இருக்கலாமென்று
வாழ்விழந்த பெண்ணொருத்தியை
முத்தமிடச் சொன்னார்கள்
அப்பொழுதும் பிரியாத
ஆவியினால்
சடங்குகள் தொடர...
கடைசியாக
நான் பாலுட்ட
பிரிந்து போனது ஆவி
அருகிலிருந்த கிழவி
ஒருத்தி சொன்னாள்
அம்புட்டு பாசம்
பேரன் மீது
குற்ற உணர்வில்
நான் நிற்க
............
கடைசி வரை
புரியவில்லை
தாத்தாவின் மரணமும் பாசமும்
கா.சரன் கவிதைகள்
Friday, April 20, 2012
Saturday, September 18, 2010
Friday, December 11, 2009
பயணம்
Wednesday, December 9, 2009
Thursday, December 27, 2007
Thursday, December 13, 2007
Saturday, September 8, 2007
Subscribe to:
Comments (Atom)



